Best Photography Today Message

Best Photography Today Message

Ok

Best Photography Today Message

Ok

njhopy;El;gk;

உயர் வேக ஒளிப்படக் கலை

உயர் வேக ஒளிப்படக் கலை

Posted Date : 29 February 2016

உயர் வேக ஒளிப்படக் கலை

High speed Photography

வேகத்திற்கு என்றும் மதிப்பு உண்டு. ஒளிப்படக்கலையிலும் வேகமான நிகழ்வுகளைப் படப்பதிவு செய்வது பெரிதும் விரும்பப்படுகிறது. விளையாட்டு மற்றும் போர் ஒளிப்படக்கலைகளில் பெரும்பாலும் இந்த அதிவேகப் படப்பதிவு தேவையானதாகவும்,. முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது.

ஒளிப்படக்கலை பிரிவுகளில் முக்கியமான ஒரு துறை 'ஹய் ஸ்பீடு' போட்டோகிராபியாகும்.. பல்வேறு காலகட்டங்களில் பலரும் இதைப் பற்றிப் பேசி இருந்தாலும் 1878-ல் எட்வர்டு மியூ மிரிட்ஜ் என்ற கலைஞரே இந்த வகை ஒளிப்படக்கலைக்கு வித்திட்டார் எனலாம்.

அதிவேகமாக ஓடும் குதிரையை முதன் முதலாக இந்த ஒளிப்படக்கலையைப் பயன்படுத்தி படம் எடுத்தார். அவ்வாறு எடுக்கும்போது தான் குதிரை வேகமாக ஓடும்போது அதன் அசைவுகளும், காலின் திறனும், செயல்படும்வாகும் புரிந்தன.

இதைத் தொடர்ந்து 1886 ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் பீட்டர் துப்பாக்கியிலிருந்து புறப்படும் தோட்டாவைப் படம் எடுத்து இவ்வகை ஒளிப்படக்கலையை இன்னும் முன்னேற்றினார். இவ்வகை ஒளிப்பதிவுத் தொழில்நுட்ப ஆய்வை இவரைத் தொடர்ந்து எர்னஸ்ட் மாக் தொடர்ந்தார்.

இவ்வகை ஒளிப்படக்கலையின் மேல் மக்களுக்கு ஒரு தீராத ஆர்வம் இருந்தது. 1930 ல் பொது மக்களுக்கான பயன்பாட்டுக் கேமராவாக, ஒரு அதிவேகக் கேமராவைக் கோடாக் நிறுவனம் வெளியிட்டது. இதன் முதல் வாடிக்கையாளர் பெல் ஆய்வக நிறுவனத்தார்கள். (இவர்களே பின்னாளில் டிஜிட்டல் கேமராவிற்கான சென்சார் கண்டுபிடித்த நிறுவனமாகும்) இந்தக் கேமராவைப் பெற்றுக் கொண்ட பெல் ஆய்வகத்தார் சும்மா இருக்கவில்லை. தாங்கள் வாங்கிய கேமராவின் ஷட்டர் வேகத்தை 5000 ஆக அதிகப்படுத்தினார்கள். இந்த கேமராவிற்கு ஃபாஸ்டடெக்ஸ் என்று பெயரிட்டு வெஸ்ட்டர்ன் எலக்ட்ரானிக் நிறுவனத்திற்கு விற்றார்கள். அவர்கள், அந்த கேமராவை ஒரு நொடிக்கு 10000 ஆக ஷட்டர் வேகத்தை அதிகப்படுத்தும் ஆய்வைச் செய்து வெலன்சாக் ஆப்டிக்கல் நிறுவனத்திற்கு விற்றனர்.

இவ்வகை ஒளிப்படக்கலை ஆரம்ப காலத்தில் ஆயுத ஆய்வகங்களில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. முக்கியமாக ஜெர்மன் ஆயுத விஞ்ஞானிகளால் குண்டு வெடிப்புகளின் போது ஏற்படும் விளைவுகளைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்டன. ஆயுதங்களின் திறன் நிர்ணயத்துக்காக ஆய்வகங்களில் உபயோகிக்கப்பட்டன.

தற்போது ஒரு டல்லியன் சட்டர் வேகம் கொண்ட கேமராவைக் கண்டுபிடிப்பது வரைவந்துள்ளது.

டிஜிட்டல் ஒளிப்பதிவுத் தொழில்நுட்பம் வந்த பின்னர் இத்துறையில் நல்ல முன்னேற்றம் வந்துள்ளது. ஒளிப்படம் எடுத்தல் என்பதே ஒரு நிகழ்வின் ஒரு நொடியையோ, அதற்குக் குறைவான அளவுள்ள ஒரு நிகழ்வின் காட்சியையோ பதிவு செய்வதேயாகும்.

இந்த ஒளிப்படக்கலையினால் என்ன பயன்? எங்கு இதை பயன்படுத்துவார்கள்? என்ற கேள்வி எழலாம். பறவை ஒளிப்படக்கலையில் ஒரு பறவை பறந்து கொண்டு இருக்கும்போது விரிந்த இறக்கைகள், அதன் உடல் அசைவு செயல்பாடுகள் முதலியவற்றைப் பார்ப்பதிலிருந்து பூச்சியினங்களை இனம் கண்டுபிடிக்க, (பிரித்து பார்க்க) அவற்றின் இறக்கைகளில் உள்ள வண்ணங்கள், கோடுகள் மிக அத்தியாவசியமாகத் தெரிய வேண்டும். இதற்காக இவ்வாறான ஒளிப்பதிவுக்கலை மிக அவசியம்.

உயர்வேக ஒளிப்படக்கலை கண்ணுக்குப் புலப்படாத பல விசயங்களை ஆவணப்படுத்தும். மிக வேகமாக நகரும் பொருட்களில் இவ்வகையான ஒளிப்பதிவுகள் பூமியின் மேற்பரப்பு இழுவிசை மற்றும் ஈர்ப்பு விளைவுகளை அளவிடவும், இராணுவ ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்களின் உயர் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிடவும், அணுவெடிகளால் மிக முக்கியமாக என்ன நடக்கின்றது என்பதை ஒவ்வொரு நொடிப்பொழுதின் சிறு நேரங்களில் பார்க்கவும், கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பந்துக்களின் சுழற்சி மற்றும் விளையாட்டுக்குத் தேவையான முடிவுகளை எடுக்கக்கூடிய பதிவுகளைக் காண இவ்வகை ஒளிப்படக்கலை மிக அவசியமான ஒன்று.

உயர்வேக ஒளிப்படக்கலையில் முக்கியமான பங்காற்றுபவை. 1.ஷட்டர் ஸ்பீடு மற்றும் எக்ஸ்போசர் 2.பிளாஸ் 3.ட்ரிக்கர்கள் (கேமராவை சரியான நேரத்தில் இயக்குபவை)

டிஜிட்டல் கேமராவாக இருந்தாலும், பிலிம் கேமராவாக இருந்தாலும், கேமராவின் ஷட்டர் வேகம் ஒரு நொடிக்கு 4000 ல் ஒரு பங்காகவோ, 8000 ல் ஒரு பங்காகவோ இருத்தல் நலம். பயன்படுத்த இருக்கும் கேமரா மேனுவலாக இயங்கும் தன்மையில் இருந்தால் மட்டுமே நல்ல படங்களை உயர் வேக ஒளிப்படக்கலையில் செய்ய முடியும். ஏனென்றால் ஆட்டோ போக்கஸ், ஆட்டோ அப்பர்ச்சர், ஆட்டோ ஐ.எஸ்.ஓ. அமைப்பு போன்றவை தானாக அமைத்துக் கொள்ளும் போக்கஸ் மாறுபாட்டால் கேமரா இயங்காமல் போகலாம். அதிக ஐ.எஸ்.ஓ.வினால் புள்ளிகள் அதிகம் உண்டாகலாம். இதனால் முழுவதுமாக மனித இயக்கத்தில் உள்ள உயர் வேக ஒளிப்பதிவு கேமரா சிறந்தது.

மேலும் பிளாஸ் ஒளிரும் நேரம் கேமரா ஷட்டர் வேகத்துடன் இணைந்து 30 மைக்ரோ நொடியிலிருந்து 0.0003 நொடிகள் வரை இருத்தல் வேண்டும். இதற்கு தற்போது வரும் ஸ்பீடு லைட்டுகள் உதவும்.

தண்ணீர் பலுன் வெடிப்பது, துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறுவது, ஒரு பல்ப் சிதறுவது போன்றவற்றைப் படம் எடுக்க பெரும்பாலும் ஒளியினைச் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. இவ்வகையான படங்களை முழு இருட்டில் கேமராவின் ஷட்டர் மற்றும் ஒரு குறுகிய கால ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் எளிதாக எடுக்க முடியும். ஆனால் வெளியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளை இவ்வாறு எடுக்க முடியாது. இங்கு வேகமான ஷட்டர் இயக்கத்தில் பதியும்படியாகச் சார்ந்து இருக்கின்றது. சூரிய ஒளியில் படம் எடுக்க ஷட்டர் வேகம் 1/250 முதல் 1/8000 வரை எடுக்கப்படும். கருப்பொருளுக்குத்தக்க மாறலாம்.

இன்னும் சிலவகை உயர் வேக படப்பிடிப்பில் கேமரா இயக்கமும், நாம் காட்சிப்படுத்த இருக்கும் நிகழ்வின் இயக்கமும் ஒரு சேர இணைந்து நடந்தால் மட்டுமே காட்சிப்படுத்துதல் முடியக்கூடிய ஒன்றாக இருக்கும். இதற்கு கேமரா இயக்கத்தை வெளி இணைப்பு ட்ரிக்கர்கள் மூலமாகவோ, ஒலி இயக்கி (Sound activater) மூலமாகவோப் படப்பதிவு செய்யலாம். போட்டோ எடுக்கப் பயன்படும் ட்ரிக்கர்கள் (Triggers) நான்கு வகைப்படும். 1.ஒளி 2.ஒலி 3.டிலே 4.ஆக்டிவ் முதலியனவாகும். உயர் வேக படப்பிடிப்பில் சரியான நேரத்தில், சரியாகப் படம் எடுக்க மூன்று காரணிகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே சரியான படங்கள் கிடைக்கும்.

டிடக்சன் (சரியான நேரத்தை அறிந்து கொள்ளுதல்

Synchronation – ஒருங்கிணைப்பு

Imaging – (படப்பதிவு)

ஒலி, அதிர்வு, ஒளியிடயூறு முதலியவற்றால் தூண்டப்படும் மின்னணு சாதனம் மூலம் இயக்கப்படும் பிளாஸ் லைட் மூலமாகவோ, கேமரா மூலமாகவோ இத்தகைய படங்களை எடுக்க முயற்சிக்கலாம். இங்கு கேமராவை இயக்க தனி மனிதன் தேவையில்லை. இங்கு ஆட்டோ போக்கஸ்ஸையும், மின்னணுவையும் ஒப்பிட்டுப் பார்த்து குழம்பிக் கொள்ள வேண்டாம்.

இவ்வகை படப்பதிவுகள் போட்டோக்களில் மட்டுமல்லாது, வீடியோக்களிலும், சினிமாக்களிலும் அதிகமாக தற்போது பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு என்றுமே ஒரு ஆசை உண்டு தன்னால் உணர முடியாததைக் காண முடியாததை பார்க்க வேண்டும். அங்கு என்னதான் நடந்திருக்கின்றது என உணர வேண்டும். இதனால் மனித சமுதாயத்திற்கு எவ்விடத்தில் நன்மை செய்யும் செயல்பாடு இருக்கின்றது என்பதை உணர வேண்டுமென்பதே. இதற்கு உயர் வேக ஒளிப்படக்கலை நல்ல தீனி.

நாமும் முயற்சித்துப் பார்ப்போமே!

njhopy;El;gk;

Showing 1 to 5 of 8 entries